🐾👟👟👟👠👟👟🐾 By the River Piedra I sat down & wept - Paulo Coelho 'அவள்' என்ற ஒற்றைச் சொல் ஒரு ஆணின் மனதில் எத்தனை வித எண்ணங்களை எழுப்புமோ, அவன் பள்ளிப் பருவத்திலிருந்து இன்று இருக்கும் வரை ஒரு சிறு குறும்படமாகவே அவன் வாழ்க்கையை மனதிற்குள் ஓட்டிப்பார்க்க வைக்கும் சொல். 'அவன்' என்ற சொல் ஒரு பெண்ணின் மனதில் எத்தனை விதமான அலைகளை மனதிற்குள் மோதச் செய்யுமோ தெரியாது. பெண்ணின் எண்ண அதிர்வுகளை கண்டுபிடிக்க எத்தனித்து தோற்றுப் போனவர்கள் எத்தனையோ பேர். பெண்களின் மனதில் ஆயிரம் எண்ணங்கள் ஓடும் என்று சொல்வார்கள். ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்டவற்றை பற்றி யோசிக்கும் பொழுதே பல ஆண்கள் விரக்த்தியின் எல்லைக்கே தங்களை கொண்டு போய் நிறுத்திக் கொண்டு உளற ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால் எத்தனை இன்பமானாலும், கஷ்டமானாலும் எளிதில் உடைந்து போகக் கூடியவர்கள் என்ற பல்லவியை சொல்லியே கட்டுக்கதைகளை நிரப்பியவர்களின் முன் பெண்கள் தைரியமாக வலம் வருவதை காணலாம். ஆண்களுக்கு புரியாத இயற்கையின் புதிர் இலை பெண். நாம் வாழ்க்கையில் எந்த ஒரு பெண்ணோடு கை கோர்த்து கடற்கரையில் நடக்கும் பொழுது, வேடிக்க...